.பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

.பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்
X
தர்மபுரி மாவட்டம் பாலகோடு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரத்தின் போது பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் பாலக்கோடு பேரூராட்சி மேல்தெரு, பட்டானியர் தெரு, மைதானம், தக்காளி மார்க்கெட், தீர்த்தகிரி நகர் உள்ளிட்ட 18 வார்டுகளிலும் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பாக அதிமுக அரசு இருக்கும் என்றார். அவருடன் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன் மற்றும் பாமக, தமாகா நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!