பாலகோட்டில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

பாலகோட்டில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்து  ஆலோசனைக் கூட்டம்
X

பாலக்கோடு பேரூராட்சி கூட்டம் 

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பெருத்து நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். தற்போது பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையில் திரௌபதி அம்மன் கோவில் முன்பு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கலாம் என்றும், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள ஜே.சி.பி வாகனங்கள், லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தற்காலிகமாக கோவில் உட்புறமாக வரிசைப்படுத்தி நிறுத்திக் கொள்ளவும், தர்மபுரி செல்லும் வாகனங்கள் நகரின் உட்புறம் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லவும், பேரூராட்சி சார்பில் தற்காலிக நிழல்கூடம், குடிநீர் வசதி செய்து தருதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இது குறித்து வணிக நிறுவனங்கள், டிராவல்ஸ், ஆட்டோ மற்றும் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசித்து தற்காலிக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என ஆலோசனை கூட்ட முடிவில் பேருராட்சி தலைவர் முரளி தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.எஸ்.பி. சிந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு