காரிமங்கலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு

காரிமங்கலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு
X

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாநாடு நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர்சந்தை அமைக்க கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்13-ஆம் வட்ட மாநாடு கெரகோடஅள்ளி, ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு வட்டத் தலைவர் மணிவேந்தன் தலைமை வகித்தார். வட்ட துணைத்தலைவர் சபரி வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் புகழேந்தி மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். வட்ட செயலாளர் முனிரத்தினம் செயலாளர் அறிக்கையினையும், வரவு - செலவு அறிக்கையினையும் சமர்பித்தார்.

மகளிர் துணைக்குழு அமைப்பாளர் இளவேனில், மாவட்ட இணை செயலாளர்கள் காவேரி உள்ளிட்டோர் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.

வட்ட மாநாட்டில் காரிமங்கலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர்சந்தை அமைக்கக் கோருதல், மழைக்காலங்களில் மழை நீரை ஏரிகளில் சேமிக்கும் வகையில் கால்வாய்களை தூர் எடுக்க கோருதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவைகளை மீள வழங்க கோருதல், சத்துணவு, MRB செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோருதல், அரசு துறைகளில் உள்ள ஒப்பந்த ஊதியம் அவுட் சோர்சிங் ஊதிய அத்துக் கூலி முறைகளை ஒழிக்கக் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து, வட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள், அனைத்துறைகளிலிருந்து 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுரையாக மாவட்ட செயலாளர் சேகர் சிறப்புரை ஆற்றினார்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?