பாலக்கோடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

பாலக்கோடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சூடனூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அண்ணாமலை, வயது 30. இவருடைய மனைவி கனகா, இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அண்ணாமலை குடும்பத்துடன் பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அண்ணாமலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!