காவல் நிலையத்திலேயே மாரடைப்பு; பஞ்சப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

காவல் நிலையத்திலேயே மாரடைப்பு; பஞ்சப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
X

மாரடைப்பால் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர்.

பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தது சாேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு போலீஸ் சப் டிவிஷனில் உள்ள பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செங்கதிர் வயது 58. இவர் இன்று காலை 9 மணியளவில் பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார்.

காவல் நிலையத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காவல் நிலையத்திலேயே மாரடைப்பு ஏற்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தது போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!