பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்

பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்
X

மாரண்டஅள்ளி வி.ஏ.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்.

பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்திற்க்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள மாரண்டஅள்ளி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

இம்முகாமில் பாலக்கோடு தாசில்தார் பாலமுருகன், துணை தாசில்தார் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் செந்தில், வட்ட துனை ஆய்வாளர் பொன் ஹரிஹரசுதன், வி.ஏ.ஓ ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!