பாலக்கோடு அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தல் : வருவாய் துறை பறிமுதல்

பாலக்கோடு அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தல் : வருவாய் துறை பறிமுதல்
X

பாலக்கோடு அருகே வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்த இரண்டு டன் கடத்தல் ரேசன் அரிசி

பாலக்கோடு அருகே கடத்த வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின்பேரில் காரிமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தாசில்தார் சின்னா மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் நேற்று இரவு பொம்மஹள்ளி சாலையில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பாலக்கோட்டில் இருந்து ஓசூர் செல்லும் வழியில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான செட்டிப்பட்டி பகுதியில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி 42 மூட்டைகளில் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர் .

அந்த அரிசியை பாலக்கோடு தமிழ்நாடு சிவில் சப்ளை குடோனில் வைக்க பட்டது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
ai marketing tools