பாலக்கோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பாலக்கோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பைல் படம்.

பாலக்கோடு அருகே பெங்களூருவுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பதுக்கி வைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து பாலக்கோடு வட்ட வழங்கல் அலுவலர் முல்லை கொடி மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராணி (வயது38) என்பவரது வீட்டில் பெங்களூருவுக்கு கடத்துவதற்காக 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!