காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன் (பொறுப்பு) உத்தரவின் பேரில் எஸ்.ஐ.,க்கள் இராமர், சிவபெருமாள் மற்றும் போலீசார் காரிமங்கலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எலுமிச்சனஹள்ளி பஸ் நிறுத்தம் அருகே சில மூட்டைகள் இருந்ததைக் கண்டனர். அதில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் முனியப்பன் எனபது தெரியவந்தது. முனியப்பன் தற்போது தலைமறைவாக உள்ளார். தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பன் என்பவரை தேடி வருகினறனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!