பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: போலீசார் விசாரணை

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

பாலக்கோடு அருகே விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை பார்க்க சென்றபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி வாணியர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் வசந்தகுமார் வயது 14. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் அப்பகுதியில் உள்ள செவத்தாம் பட்டி பனைமரத்து ஏரிக்கு சென்றுள்ளார். இவருடன் அவரது நான்கு நண்பர்களும் சென்றுள்ளனர். அங்கு விநாயகர் சிலை கரைக்க போகும் இடத்தை பார்க்க முற்பட்டபோது எதிர்பாரதவிதமாக வசந்தகுமார் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் மாரண்டஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு