பாலக்கோடு அருகே பிக்கப் வேன் கவிழ்ந்து மூன்று பேர் பலி

பாலக்கோடு அருகே பிக்கப் வேன் கவிழ்ந்து மூன்று பேர் பலி
X

விபத்துக்குள்ளான வேன். 

பாலக்கோடு அருகே பெட்டமுகிலாலம் மலைப்பகுதியில், பிக்கப் வேன் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 15 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம், 22 பேர்,பெட்டமுகிலாலம் அருகே காங்கிரிபுதூரில் உள்ள உறவினர் அண்ணாதுரை என்பவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக பிக்கப் வாகனத்தில் சென்றனர்.

பின்னர் மீண்டும் பெட்டமுகிலாலம் செல்லும் மலைப்பாதையில் நேற்று பகல் வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தீபா (வயது 35), தங்கம்மாள் (வயது 55), ஆகியோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த,15 க்கும் மேற்பட்டவர்களை, அருகே இருந்த பொது மக்கள் உதவியுடன், 108 ஆம்புலன்சு மற்றும் அந்த வழியாக வந்த வாகனங்களின் உதவியுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில், சிகிச்சை பலனின்றி மாதப்பன் (வயது 55 ) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுனர் காளி (வயது 35) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!