சாலை மட்டம் உயர்வதால் மழைநீர் வீடுகளுக்குள் வரும் அபாயம் -மக்கள் எதிர்ப்பு

சாலை மட்டம்  உயர்வதால் மழைநீர் வீடுகளுக்குள் வரும் அபாயம் -மக்கள் எதிர்ப்பு
X
பாலக்கோடு பேரூராட்சியில் சிமெண்ட் சாலை அகற்றாமல் பேவர் பிளாக் கல் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் கடந்த ஆண்டு மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் மூலம் 5 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் சீரான ஒகேனக்கல் குடிநீர் வழங்க பணிகள் துவங்கப்பட்டது.

குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந் நிலையில், மழைநீரை சேமிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், மழை நீர் பூமிக்கடியில் செல்லும் வகையிலும் சிமெண்ட் சாலைக்கு பதிலாக பேவர் பிளாக் கல் பதிக்க முடிவு செய்யப்பட்டு பாலக்கோடு பேரூராட்சி மூலம் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதீப்பிட்டில் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் சிமெண்ட் சாலையை அகற்றாமல் கல் பதிக்கும் பணியை செய்து வருவதால் பொதுமக்கள் இதற்கு எதிரிப்பு தெரிவித்தனர், இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மீண்டும் பேரூராட்சி அதிகாரிகளின் துணையுடன் இன்று தீர்த்தகிரி நகரில் சிமெண்ட் சாலையை அகற்றாமல் அதன் மீது பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புதெரிவித்து சிமெண்ட் சாலையை அகற்றிய பின்னரே கல்பதிக்க வேண்டும் என பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கல் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில் சிமெண்ட் சாலையின் மீது கல் பதிப்பதால் சாலை மட்டம் ஒரு அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தெருக்களில் உள்ள வீடுகளின் மட்டம் சாலைக்கு கீழே சென்று விட்டது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் செல்கின்றன.

தெருக்களில் உள்ள கான்கிரீட் சாலையை அகற்றி, கழிவு நீர் கால்வாய் கட்டிய பின்னரே பேவர் பிளாக் கல் பதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!