பாலக்கோடு ஒன்றிய ஊராட்சிகளில் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற தீர்மானம்
பாலக்கோடு ஒன்றியம், பேளாரஹள்ளி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டம்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பி.செட்டிஹள்ளி, பேளாரஅள்ளி ஜெர்த்தலாவ், அமானிமல்லாபுரம், தண்டுகாரனஅள்ளி, கரகத அள்ளி, அத்திமுட்லு உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சியில் நடைப்பெற்று வரும் திட்ட பணிகள், குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு , சுகாதாரம், இலவச வீடு, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட 32 ஆவணங்கள் பற்றி கேள்வி எழுப்பபட்டது. மேலும் பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர் தெருவிளக்கு குறித்து பெண்கள், இளைஞர்கள் காரசார விவாதம் நடைப்பெற்றது.
பாலக்கோடு ஒன்றியம் வறட்சி மற்றும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் வாழ்வாதார பிரச்சினை அடிப்படையாகக்கொண்டு மத்திய மாநில அரசுகளின் பார்வை கொண்டு செல்ல கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:
1.தூள்செட்டி ஏரி நீர்ப்பாசன திட்டம், 2.ஒகேனக்கல் உபரிநீரை குழாய்கள் மூலம் அனைத்து ஏரிகளுக்கும் கொண்டு செல்லும் திட்டம்,
3.அனைத்து ஊராட்சிகளுக்கும் திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டனர்.
இக்கிராம சபா கூட்டத்தில் வேளாண்மைத் துறை, கல்வி துறை, சுகாதாரத் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu