இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பு முறையைப் பின்பற்ற கோரிக்கை

இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பு முறையைப் பின்பற்ற கோரிக்கை
X

தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வேலையில்லா பட்டதாரிகள்

இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பு முறையை கடைப்பிடிக்க வேண்டுமென வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென வேலையில்லா பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் பகுதியை சேர்ந்த சரவணன் தலைமையில் ட வேலை இல்லா பட்டதாரிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து 7846 பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனமானது, கடந்த 2012 ம் ஆண்டு வரை பதிவு மூப்பின் அடிபடையில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது .

அதன் பிறகு இதற்கு முந்தைய அரசானது ஆசிரியர் தகுதி தேர்வின் அடிபடையில் நியமனம் செய்தது மேல்நிலை பள்ளி கல்வி முடித்து இரண்டு வருடங்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர் தகுதி பெற்றுள்ள எங்களுக்கு தகுதி தேர்வு என்பது மிகவும் பதிப்பை உருவாக்கும் விதத்தில் உள்ளது. மேலும், எங்களில் பலர் ஆசிரியர் பணிக்கான கலந்தாய்விலும் பலமுறை கலந்து கொண்டுள்ளோம். எங்களில் பெரும்பான்மையானோர் அரசு பள்ளிகளிலும் கிராமப்புற சூழ்நிலைகளிலும் பயின்று ஆசிரியர் பணிக்கான பயிற்சியை முடித்தவர்கள் . நாங்கள் பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் சூழ்நிலையில் எங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மீண்டும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பனி நியமனம் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!