பாலகோட்டில் மழைக்கு இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு

பாலகோட்டில் மழைக்கு இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு
X

பாலகோட்டில் மழைக்கு இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு

பாலக்கோடு அடுத்த கரகதஹள்ளியில், 20 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு மழைக்கு இடிந்து விழுந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கரகதஹள்ளி கிராமத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக, 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 100 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட குளிர்பதன கிடங்கின் கட்டட பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று, கரகதஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், குளிர்பதன கிடங்கிற்கு கட்டப்பட்டிருந்த, 15 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது. மழையால் கட்டுமான பணியாளர்கள் வேறு இடத்தில் ஒதுங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, குளிர்பதன கிடங்கு பணியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்