பாலக்கோடு அருகே கோடை காலத்திற்கு முன்பே வறண்ட சின்னாறு: விவசாயிகள் கவலை
வறண்டு கிடக்கும் சின்னாறு.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சின்னாறு ஓடுகிறது. இதன் பிறப்பிடமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் இருந்து உற்பத்தியாகும் சின்னாறு ஆற்றின் மேலகிரியும், ஊடேதுர்க்கம் மலைகளும் ஆற்றுக்கு நெருங்கி இருக்கும் பஞ்சப்பள்ளியில் கட்டப்பட்ட சின்னாறு அணையாகும்.
இந்த அணை 1977இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள். நீர்பிடிப்பு பரப்பு 420ஏக்கர் , மொத்த கொள்ளவு 50 அடியாகும். மற்றொன்று கேசர்குழி அணை சின்னாறு சேரும் இடத்திற்கு 10.கி.மீ மேலே அமைந்துள்ளது. திருமால்வாடி சிற்றூருக்கு அருகே உள்ள போளுஅள்ளி என்ற இடத்திற்கு அருகே உள்ளது. இந்த அணை 1983 கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 134 மில்லியன் கன அடிகள். இதன் பாசணப்பரப்பு 4000 ஏக்கர்.
மேலும் இந்த 2 அணைகள் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம். ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. பஞ்சப்பள்ளி ஏரி, பெரியானூர் ஏரி, அத்திமுட்லு ஏரி, செங்கன்பசுவன்தலாவ் ஏரி, தும்பலஹள்ளி அணை, கடத்தூர் ஏரி, ராமக்கா ஏரி , மற்றும் திருமால்வாடி, பெலமாரனஅள்ளி, பேவுஅள்ளி, சீரியனஅள்ளி, கரகூர், எர்ரகுட்ட அள்ளி, பூதிஅள்ளி, நல்லூர் உள்ளிட்ட சின்னாற்றின் மூலம் பாலக்கோடு, பென்னாகரம் தாலுகா பகுதியில் பாசன நீர் தேவை மற்றும் குடிநீர் நீர் ஆதாரமாக உள்ளது. தர்மபுரி நகராட்சி பகுதிக்கு பஞ்சப்பள்ளி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு சின்னாற்று நீர் பெரும் அளவில் கை கொடுத்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஆனால் நடப்பு பருவத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தற்போது வடகிழக்கு பருவமழை பொழிந்து வருகிறது. இதனால் காப்புக்காடு பகுதியில் அதிக மழை பொழிவின் காரணமாக ஆங்காங்கே சிற்றாருவிகள் மூலம் கேசர்குழி அணை , சின்னாறு அணைக்கு நீர்வரத்து உள்ளது.
மேலும் சின்னாற்று ஆற்று படுகையில் காப்புக்காடு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் நேரடியாக கூட்டாற்றில் கலந்து சின்னாற்றில் இணைகிறது. சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு சின்னாற்றில் தடுப்பணைகள் எதுவும் இல்லாததால் ஆண்டுதோறும் வெளியேறும் மழைநீர் சுமார் ஐந்து டிஎம்சி தண்ணீர் வீணாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்து கடலில் கலக்கிறது. இதனால் இப்பகுதி கடுமையாக வறட்சி நிலவியது மட்டுமின்றி விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே தமிழக அரசு சின்னாற்றில் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu