பாலக்கோடு அருகே பெண் குழந்தைகளுக்கு காவல்துறையினர் பாலியல் விழிப்புணர்வு

பாலக்கோடு அருகே பெண் குழந்தைகளுக்கு காவல்துறையினர் பாலியல் விழிப்புணர்வு
X

பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு காவல்துறையினர் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் .

பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் எவ்வாறு பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர், நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை எவ்வாறு உணர்வது, பாலியல் சீண்டல் ஏற்படும் போது தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, மேலும் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கட்டுபாட்டு அறையை 181, மற்றும் 1098 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பாலக்கோடு காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் நிலைய எழுத்தர் சின்னசாமி, மகளிர் காவலர்கள் சத்யா, புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது