பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
X

பைல் படம்.

பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் வயது 45. இவருக்கு தேவரதி வயது 13, என்ற மகளும்,லோகேஷ்வரன் வயது 9, என்ற மகனும் உள்ளனர். மாதேஷ் அரூர் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதில் தேவரதி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். தேவரதி கடந்த 6 மாதத்துக்கு முன்பு பருவமடைந்தார். அப்போதிலிருந்து தீராத வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த அவர் இன்று பிற்பகல் 2 மணி அளவில் மாடி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி போலீசில் தந்தை மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்