கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திம்லாமேடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது.30) என்பவர் போலீசாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தார்.

அவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் அரை கிலோ எடை கொண்ட கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story