பெரியாம்பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

பெரியாம்பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
X

பெரியாம்பட்டி கிராம எல்லையில் தடைசெய்யப்பட்ட பகுதி என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

தொற்றுபரவல் அதிகம் காரணமாக தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு பொதுமக்களின் போதுமான ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.

தருமபுரி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் தினமும் 100க்கும் மேற்பட்டோர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு வரை பொதுமக்கள் பரிசோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனிடையே தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் புதிதாக 153 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி கிராமத்தில் ஏராளமானோர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமமான பெரியாம்பட்டிக்கு வரும் இரண்டு சாலைகளும் இரும்பு கேட்டால் அடைக்கப்பட்டுள்ளது. அதில் ஊராட்சி சார்பாக கொரோனா தொற்று உள்ள பகுதி . இது தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் மொத்தம் 1,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!