காரிமங்கலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

காரிமங்கலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
X
காரிமங்கலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; அத்துடன் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம் பேரூராட்சியில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் பலபேர் முகக்கவசம் அணியாமல் நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் தலைமையிலான குழு காரிமங்கலம் பகுதிகளில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு தலா ரூ.200 வீதம் இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்து வந்த உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!