குட்டை போல் மாறிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை: குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

குட்டை போல் மாறிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை: குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
X

நம்பினால் நம்புங்கள்,  இது அணைதான்! பாலக்கோடு அருகே தண்ணீரின்றி குட்டைபோல் வறண்டு கிடக்கும்பஞ்சப்பள்ளி சின்னாறு அணை.

பாலக்கோடு அடுத்துள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தண்ணீரின்றி, குட்டை போல் காணப்படுகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு அடுத்துள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, 50 அடி உயரம் உள்ளது. அணையில், 11 இடங்களில் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்து, பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அணையில் இருந்த தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் இந்த அணையை நம்பி, 4500 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் உள்ளது.

தர்மபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீருக்கு ஆதராமாக உள்ள இந்த அணை, கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், தண்ணீரீயின்றி வறண்டு, தற்போது குட்டையைப் போல் காணப்படுகிறது. இதனால் பாலக்கோடு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

மேலும் இந்த அணையை நம்பி உள்ள ஏராளமான விவசாய நிலங்கள், வானம் பார்த்த பூமியாக மாறி உள்ளன. பருவமழை துவங்கினால் மட்டுமே சின்னாறு அணைக்கு தண்ணீர் வரத்து வரும் என்பதால், விவசாயிகள் பருவழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Tags

Next Story