பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

பாலக்கோடு மார்க்கெட்டில்  தக்காளி விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி. (பைல்படம்)

பாலக்கோடு மார்க்கெட்டில் ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை,பெல்ரம்படி, எர்ரணஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தக்காளி பயிரிடுகின்றனர். பாலக்கோடு பகுதியில் செயல்படும் தக்காளி சந்தையில் நாள்தோறும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதங்களாக விலை சரிந்து 2ரூபாய்க்கு விற்பனை செய்த தக்காளி தற்போது தொடர்ந்து சுபநிகழ்ச்சிகள், பண்டிகை மற்றும் திருமண சுப முகூர்த்த தினங்கள் வருவதால் தக்காளி விலை சற்று அதிகரித்து கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் தக்காளியை ஊறுகாய், சாஸ் போன்றவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான பயிற்சி விழிப்புணர்வு தரப்பட்டால் இந்த விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே வேளாண்துறையினர் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு