பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா : சமூக இடைவெளியுடன் நடைபெற்றது

பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா : சமூக இடைவெளியுடன் நடைபெற்றது
X

பாலக்கோடு காட்டம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா அலங்காரம் 

பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஊர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களான அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

கொரோனா பரவல் தடுப்பாக கிராம மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தல் பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், என மேளதாளம் முழங்க பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

பெண்கள் மாவிளக்கு தட்டு மற்றும் பூஜை பொருட்கள் என பக்தர்கள் ஸ்ரீஊர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ காளியம்மன் கோவில் வரை நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர் மேலும் அம்மனுக்கு கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்,கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இந்தவிழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil