முன்னாள் அமைச்சர் அன்பழகனுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு
கெரகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனை தமிழக எதிர் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
கடந்த ஜனவரி 20-ம் தேதி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பிஅன்பழகன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20 ந் தேதி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் துறையினர் சோதனையிட்டனர். அன்று சி.வி.சண்முகம, வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் வந்திருந்தனர்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அன்பழகனை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். இதனையடுத்து இன்று வேலூரில் இருந்து சேலம் சென்ற முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கெரகோடஹள்ளியில் உள்ள கே.பி. அன்பழகன் வீட்டிற்கு பழனிசாமி வந்தார்.
சிறிதுநேரம் இருந்த அவர் இருவரும் தனி அறைக்குள் சென்று சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் தனியாக சென்று பேசினர். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு 9:10 மணிக்கு தனி அறையிலிருந்து வெளியே வந்து காரில் ஏறி சென்றார்.
இவர்கள் சந்திப்பின் போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, முல்லைவேந்தன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெளியே காத்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu