பாலக்கோடு அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபர் தற்கொலை

பாலக்கோடு அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபர் தற்கொலை
X

கோகுல்

பாலக்கோடு அடுத்த பொம்மனூர் கிராமத்தில், ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபர், முடிவில் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி. இவரது மகன் கோகுல் (வயது.21) டிப்ளமோ படித்து முடித்து ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது, வீட்டுக்கு வந்த கோகுல் செல்போனில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவதற்கு அடிமையானார்.

இந்த விளையாட்டுக்காக, பெற்றோர்க்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் சேமிப்பு பணத்தை வைத்து விளையாடி, அவற்றை இழந்தார். மேலும் கடனும் அதிகரித்ததால், சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு வாந்தி எடுத்து மயங்கி உள்ளார். அப்போது, பெற்றோரிடம் தான் எலி மருந்து சாப்பிட்டதாக கூறியதையடுத்து வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து நேற்று முன்தினம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கோகுல், நேற்று அங்கு சிகிச்சை பலனியின்றி உயிரிழந்தார். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Tags

Next Story
ai healthcare products