திமுக வினருக்கு துணை போகும் அதிகாரிகள்: வேட்பாளர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

திமுக வினருக்கு துணை போகும் அதிகாரிகள்: வேட்பாளர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
X

பாலக்கோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள்.

பாலகோட்டில் திமுக வினருக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்து வேட்பாளர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைப்பெற்றது.

திமுகவிற்கு எதிரான அதிமுக மற்றும் சுயோட்சை வேட்பாளர்களின் கையெழுத்துகளை போலியாக கையொப்பமிட்டு வேட்பு மனுவை வாபஸ் வாங்கியதாக நிராகரித்துள்ளனர்.

பேரூராட்சி தேர்தல் அலுவலத்தில் திமுக நகர செயலாளரும் 17 வது வார்டு உறுப்பினருமான முரளி அமர்ந்து கொண்டு அதிகாரிகளை தன் இஷ்டம் போல், வேட்பாளர்களின் மனுவை நிராகரிக்க வைக்கிறார். இதற்கு அதிகாரிகள் துணை போகின்றனர்.

4 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் யாகுப்கான், 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மேத்தாப், 11வது வார்டு அதிமுக வேட்பாளர் பரியாஸ் ஆகியோரது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கியதாகக் கூறி அதிகாரிகள் நிராகரித்தனர்‌.

திமுகவின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து வேட்பாளர்களும் பொதுமக்களும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு டி.எஸ்.பி.தினகரன், மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் பாலகோட்டில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil