காரிமங்கலம் யூனியன் கும்பாரஅள்ளி ஏரிக்கு தண்ணீர் திறப்பு
காரிமங்கலம் யூனியன் கும்பாரஅள்ளி பஞ்சாயத்தில் உள்ள ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணை உபரி நீர் திறக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் உபரி நீரை கால்வாய் மூலம் கொண்டுவரும் திட்டம் 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட எல்லையான கும்பாரஅள்ளி பஞ்சாயத்தில் உள்ள ஏரிகளுக்கு முதலில் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் மற்ற ஏரிகளுக்கு முதலில் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்ததற்கு கும்பாரஅள்ளி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் சப் கலெக்டர் சித்ரா விஜயன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் முதலில் கும்பாரஅள்ளி ஏரிக்கு 20ம் தேதி முதல் பத்து நாட்களுக்கு தண்ணீர் விடுவது எனவும் அதைத் தொடர்ந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவின்படி தண்ணீர் திறக்க அதிகாரிகள் வராத நிலையில் பஞ்சாயத்து தலைவர் கௌரி திருக்குமரன் தலைமையில் விவசாயிகள் கும்பாரஅள்ளி ஏரிக்கு தண்ணீரை திறந்து விட்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பழனியம்மாள் பழனி ஊர் கவுண்டர்கள் முருகன், ரங்கசாமி பழனி மந்திரி கவுண்டர் வெங்கடாசலம் சஞ்சீவன் காளியப்பன் அன்பு மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu