பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு: கடமையை கச்சிதமாக செய்யும் போலீசார்

பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு:  கடமையை கச்சிதமாக செய்யும் போலீசார்
X
காரிமங்கலம் பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், போலீசார் பேரிகார்டுகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பைபாஸ் சாலையில் அகரம் பிரிவு ரோடு வழியாக, தினசரி ஆயிரம் கணக்கான பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் மேம்பாலம் இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பல பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் பேரிகார்டுகளை அமைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தற்போது அப்பகுதியில் பேரிகார்டுகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். போலீசார் சோதனை செய்வதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை பின்பற்றி மெதுவாக செல்கின்றர்.

இதனால் பொதுமக்கள் விபத்து அபாயமின்றி சாலையை எளிதாக கடந்து செல்ல முடிகிறது. விபத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கடமையை செய்து வரும் காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story