சட்டப்பேரவை தேர்தல்: காரிமங்கலம் வாரச்சந்தை தேதி மாற்றம்.!

சட்டப்பேரவை தேர்தல்: காரிமங்கலம் வாரச்சந்தை தேதி மாற்றம்.!
X
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம் வாரச்சந்தையானது, தேர்தல் நாளான 6ம் தேதி செவ்வாய்கிழமை கூடுகிறது.

தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம் வாரச்சந்தையானது, தேர்தல் நாளான 6ம் தேதி செவ்வாய்கிழமை கூடுகிறது. தேர்தல் தேதி என்பதால் அன்றைய தினம் சந்தை கூடுவது, வாக்களிப்பதை பாதிக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கருதினர்.

இதனையடுத்து சந்தை நடக்கும் தேதியை 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். எனவே விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 7ம் தேதி நடக்க உள்ள சந்தையில் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், செயல் அலுவலர் ராஜா ஆறுமுகம் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!