பாலகோட்டில் ஜமாபந்தி: தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்பு

பாலகோட்டில் ஜமாபந்தி: தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்பு
X

பாலகோட்டில் ஜமாபந்தி கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது

பாலகோட்டில், கலெக்டர் ச.திவ்யதர்சினி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், 1430 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது. முதல்நாளில் புலிக்கரை, செல்லியம்பட்டி தொகுதி, வரகூர், கொல்லஅள்ளி தொகுதி, போத்தலஅள்ளி, செக்கோடி, பூகான அள்ளி, காட்டன அள்ளி தொகுதி, குத்தலஅள்ளி, போலபகுத்தன அள்ளி, சிட்டிகானஅள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி தொகுதி, செட்டிஅள்ளி, தோமலஅள்ளி, போதுகுல அள்ளி,பத்தமஅள்ளி, நேரலமருதஅள்ளி, கருக்குமாரனஅள்ளி ஆகிய கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது.

இரண்டாம் நாளான நேற்று, ஜெர்தலாவ், என்ரனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, கரகதஅள்ளி, பாலக்கோடு, பேளாரஅள்ளி, சிக்கார்தன அள்ளி, பெலமாரன அள்ளி, நல்லூர் தொகுதி, கனவேனஅள்ளி, பூதி அள்ளி, திருமல்வாடி, பேவுஅள்ளி, சீரியனஅள்ளி தொகுதி, எர்ரகுட்டஅள்ளி, சீராண்டபுரம், பொப்பிடி, எருதுகுட்டஅள்ளி, தண்டுகாரன அள்ளி,செங்கள் பசவந்தலாவ்,புலிக்கல் ஆகிய கிராமங்கள் கணக்குகளை தணிக்கை செய்தார்.

அதைத் தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று, அத்திமுட்லு, சாமனூர், கொரவாண்டஅள்ளி தொகுதி (கெண்டேன அள்ளியின் ஒரு பகுதி) பஞ்சப்பள்ளி, சினனே கவுண்டன அள்ளி, சூடனூர், சிக்கமாரண்டஅள்ளி தொகுதி, சென்னமேனஅள்ளி, மாரண்டஅள்ளி, கொரவாண்ட அள்ளிதொகுதி (கெண்டேன அள்ளியின் ஒரு பகுதி), பெலகாபுரம் தொகுதி, (கௌண்டேன அள்ளியின் ஒரு பகுதி) சிக்கதோரணப்பெட்டம, பெரியானூர் தொகுதி, கோதிகுட்லஅள்ளி (போடிகுட்டபட்டி), குற்றார அள்ளி தொகுதி, ரங்கப்பட்டி, உப்பாரஅள்ளி ஆகிய கிராமங்களுக்கு தணிக்கை நடந்தது.

நாளை, வெள்ளிசந்தை உள்வட்டம், பிக்கனஅள்ளி, வெலகல் அள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி தொகுதி, கிட்டன அள்ளி, ஐக்கசமுத்திரம், திம்மராயனஅள்ளி தொகுதி,கருக்களஅள்ளி,மாரவாடி முருக்கல் நத்தம், அண்ணாமலை அள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலம் உட்பிரிவு, குடும்ப அட்டை, பட்டதாரி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, வாரிசுச்சான்று, உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் இணையதளத்தின் மூலம் பெறப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி , அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் இணையதளத்தின் மூலம்; பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், சரியான முகவரி, தொலைபேசி எண்கள் இல்லாத மனுக்களை ஆய்வு மேற்கொண்டு சரியான மனுக்களை பெற்று தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!