மன வளர்ச்சி குன்றிய தம்பதியினருக்கு வீடு; நெகிழ வைத்த தன்னார்வலர்கள்

மன வளர்ச்சி குன்றிய தம்பதியினருக்கு வீடு; நெகிழ வைத்த தன்னார்வலர்கள்
X

பாலக்கோடு அருகே மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து வீடுகட்டி கொடுத்தனர்.

பாலக்கோடு அருகே மன வளர்ச்சி குன்றிய தம்பதியினருக்கு தன்னார்வலர்கள் வீடு வழங்கியது. நெகிழ்ச்சி. .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கிருஷ்னன் - சித்ரா தம்பதி மற்றும் அவரது குழந்தைகள் இருவர் என நான்கு பேரும் மன நலம் குன்றியவர்கள், இவர்கள் குடியிருந்த வீடு மிகவும் சிதைந்து எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.

இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்னத்தில் சோமனஅள்ளியை சேர்ந்த மலைமுருகன் என்பவர் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பழைய வீட்டை இடித்து விட்டு அந்த இடத்தில் 2 இலட்சம் ரூபாய் செலவில் புதிய வீடு ஒன்றை கட்டி காெடுத்தார்.

இதனை தர்மபுரி உதவும் உள்ளங்கள் அமைப்பை சேர்ந்த மாணிக்கம், முதியோர் இல்லத்தை சேர்ந்த சந்திரம்மாள், செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த அருள் ஆகியோர் முன்னிலையில் புதிய கட்டி முடிக்கப்பட்ட வீடு கிருஷ்னன் - சித்ரா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலக்கோட்டை சேர்ந்த கேசவன், சுவர்னலதா ஆகியோர் அவர்களுக்கு 3 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!