பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான மாரியம்மன் திருவிழா

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான  மாரியம்மன் திருவிழா
X

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான ஸ்ரீ மாரியம்மன் திருவிழா .

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான ஸ்ரீ மாரியம்மன் திருவிழா .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞானஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சீரண்டபுரம் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கொண்டாடி வருகின்றனர்.

இத்திருவிழாவானது கடந்த 29ம் தேதி ஏரிக் கோடி முனியப்பன் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு தட்டுவரிசை எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், நாட்டு கவுண்டர், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


Tags

Next Story