காரிமங்கலம் அருகே பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

பாலக்கோடு அருகே, காரிமங்கலம் அருகே பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவரின் மனைவி சுஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). குடும்பத் தகராறு காரணமாக, கணவரை பிரிந்து, மகனுடன் வாழ்கிறார்.

கடந்த 22ஆம் தேதி இரவு, வீட்டில் சுஜி தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த காண்டிபன் வயது 37. என்பவர் போதையில் சங்கீதா வீட்டு கதவைத் தட்டினார். கதவை திறந்த சுஜியை, பலாத்காரம் செய்துள்ளார். அதை தொடர்ந்து, அடுத்த நாள், ஆண்ட்ரிஸ் என்பவரும், சுஜி வீட்டுக்கு சென்று, மிரட்டி பலாத்காரம் செய்தார். வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக, மிரட்டிவிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து, காரிமங்கலம் போலீசில், அவர் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து, காண்டீபன், ஆண்ட்ரிஸ் இருவரையும் கைது செய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!