பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் பழுதான கட்டிடம் அகற்ற விவசாயிகள் கோரிக்கை
பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் பழுதான கட்டிடம்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தக்காளி மார்க்கெட் பகுதியில் தாட்கோ கட்டிடம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் தக்காளி மார்கெட்டிற்கு 100 முதல் 200 டன் தக்காளி வரை விவசாயிகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வந்து செல்கின்றனர். நடப்பாண்டில் தொடர்ந்து பருவ மழை பொழிவால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது .
இந்த நிலையில் விவசாயிகளுக்கு போதிய இடவசதி இல்லாததால் விவசாயிகள் சாலை ஓரம் தக்காளியை விற்பனை செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தக்காளி மார்க்கெட் பகுதியில் தட்கோ கட்டிடம் பல ஆண்டுகளாக பழுதாகி கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து செல்லும் இடத்தில், எப்போது வேண்டுமானாலும் விழும் தருவாயில் உள்ளது. இந்த கட்டிடத்தால் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து காய்கறி கடை, டீ கடை, கறி கடை, ஓட்டல், பூ செடிகள் விற்பனை கடை உள்ளிட்ட கடைகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள், வியாபாரிகள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் தக்காளி மார்க்கெட் பகுதியில் உள்ள பழுதான கட்டிடத்தை அகற்றி அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் தக்காளி விற்பனை செய்ய மற்றும் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu