மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே, மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் 60. இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 27 ந்தேதி பிற்பகல் குறட்டை ஏரியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, அதில் ஒரு ஆடு பெரியண்னணை முட்டித் தள்ளியதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பின்பக்கம் மற்றும் இடது கால் தொடையில் பலத்த உள் காயம் ஏற்பட்டது. தகவல் தெரிந்து உறவினர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மகன் முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி