பாலக்கோட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பாலக்கோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பேரூராட்சி அதிகாரிகள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளிமண்டி பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான இடத்தை கடந்த 30 ஆண்டுகளாக தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்தனர். ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சி செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் தாமதிக்காமல் வீட்டை காலி செய்து இடத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும், தவறினால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்ற ப்பட்டு பேரூராட்சி க்கு சொந்தமான இடம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு நோட்டிஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 9 வீடுகளிலும் குடியிருப்பவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்றனர்.
மேலும் அறிவிப்பை வீட்டு கதவிலும் ஒட்டினர்.ஆனால் அறிவிப்பு விடுத்து 3 மாதங்களாகியும் வீட்டை காலி செய்யாததால் மாவட்ட ஆட்சியர் சாந்தி உடனடியாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இன்று பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஜே.சி.பி மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து வீடுகளையும் இடித்து பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். அது சமயம் பாதுகாப்பு பணியில் பாலக்கோடு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் என 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu