அமைச்சர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.கவில் ஐக்கியம்

அமைச்சர்  முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.கவில் ஐக்கியம்
X
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட பிற கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சரும், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதே போன்று பாலக்கோடு தொகுதியில் உள்ள பி.செட்டிஅள்ளி ஊராட்சியை சேர்ந்த திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அதேபோல விஜய் மக்கள் இயக்க தொண்டர்களும் சேர்ந்தனர்.

அனைவருக்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். தற்போது பாலக்கோடு தொகுதி விஐபி அந்தஸ்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!