பாலக்கோடு காவல் நிலையத்தில் பதிவேடுகளை டி.எஸ்.பி., திடீர் ஆய்வு

பாலக்கோடு காவல் நிலையத்தில் பதிவேடுகளை டி.எஸ்.பி., திடீர் ஆய்வு
X

பாலக்கோடு காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புக்கள் மற்றும் காவல் நிலைய பதிவேடுகளை  ஆய்வு செய்த டி.எஸ்.பி., தினகரன்.

பாலக்கோடு காவல் நிலையத்தில் பதிவேடுகளை டி.எஸ்.பி., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புக்கள் மற்றும் காவல் நிலைய பதிவேடுகளை டி.எஸ்.பி., தினகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பாலக்கோடு காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த கோப்புக்களின் நிலையினை ஆய்வு செய்த பாலக்கோடு உட்கோட்ட டி.எஸ்.பி., தினகரன் ஆய்வின் போது நிலுவையில் உள்ள வழக்கு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் தீர்வு கான ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, நிலைய எழுத்தர் சின்னசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future