பாலக்கோட்டில் வீடு இழந்த குடும்பத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் நிவாரணம் வழங்கல்

பாலக்கோட்டில்  வீடு இழந்த குடும்பத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் நிவாரணம்  வழங்கல்
X

பாலக்கோட்டில் மழையால் வீடு இழந்த குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கிய திமுக ஒன்றிய செயலாளர் பி.கே.அன்பழகன்.

பாலக்கோட்டில் மழையால் வீடு இழந்த குடும்பத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தொட்ட ஆரதனள்ளி காலனியைச் சேர்ந்த இரவி- செந்தாமரை தம்பதியினர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டு வீட்டில் குடியிருந்து வந்தனர்.

கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக சுற்றுப்புற சுவர்கள் அனைத்தும் சேதம் அடைந்து ஒரு புறம் உள்ள சுவர் இடிந்து விழுந்ததால் இந்த தம்பதியினர் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் பாலக்கோடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.கே.அன்பழகன், வீடு இழந்த ரவி- செந்தாமரை தம்பதியருக்கு வீட்டை சரி செய்து கொள்வதற்காக ரூ.10,000 மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை, ஊராட்சி மன்ற தலைவர் மணி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன்,கிளைச் செயலாளர்கள் முருகன்,நடராஜ், பசுராஜ்,கணேசன்,இராமமூர்த்தி, சின்னப்பையன், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திகேயன், ஜெகநாதன்,மாணவரணி மணிவண்ணன், தொண்டரணி குமார், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!