மேய்ச்சலுக்கு சென்ற மாடு மின்னல் தாக்கி பலி.!

மேய்ச்சலுக்கு சென்ற மாடு மின்னல் தாக்கி பலி.!
X
பாலக்கோடு, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அப்போது திடிரென மின்னல் தாக்கி மாடு உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று மதியம் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதுடன், மின்னலுடன் மழை கொட்டியது.

இந்நிலையில், கிருஷ்ணாபுரம் அருகே இண்டமங்கலம் மேஸ்திரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரமேஷ் விவசாயியான இவுர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை தென்னை தோப்பில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். அப்போது பலத்த காற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது.

தருமபுரியில் மாவட்டத்தில், பாலக்கோடு, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அப்போது திடிரென மின்னல் தாக்கி ரமேஷின் மாடு உயிரிழந்தது. இந்த பசு மாட்டின் விலை ரூ.60 ஆயிரம் இருக்கும் என தெரிவித்தனர்.இது பற்றிய தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். விவசாயி பசு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!