காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு தருமபுரி கலெக்டர் அஞ்சலி

காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு தருமபுரி கலெக்டர் அஞ்சலி
X

காஷ்மீரில் உயிரிழந்த, தருமபுரி கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் எஸ்.பூபதியின் உடலுக்கு, ஆட்சியர் திவ்யதர்சினி அஞ்சலி செலுத்தினார். 

காஷ்மீரில் உயிரிழந்த தருமபுரி மாவட்ட ராணுவ வீரரின் உடலுக்கு, கலெக்டர் திவ்யதர்சினி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.பூபதி, 27, இவர் இந்திய ராணுவ வீரர் ஆவார் இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 4ம் தேதி அன்று ராணுவ வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் ராணுவ வீரர் பூபதி மரணமடைந்தார்.

உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கம்மாளப்பட்டி கிராமத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் ராணுவ வீரரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ வீரரின் உடல் உரிய மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!