தர்மபுரியில் ஆசிரியை மாணவிக்கு கொரோனோ:அரசு பள்ளிக்கு விடுமுறை

தர்மபுரியில் ஆசிரியை மாணவிக்கு கொரோனோ:அரசு பள்ளிக்கு விடுமுறை
X

பைல்படம்

மாணவர்கள் யாரும் அச்சப்படத் வேண்டாம், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தர்மபுரியில் ஆசிரியை மாணவிக்கு கொரோனோ தொற்று காரணமாக அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தர்மபுரி அருகே கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆசிரியை ஒருவர் விடுமுறையில் சென்றார். அவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் பள்ளியில் கொரோனோ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது .இதில் ஒரு மாணவிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மாணவி மற்றும் ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் பள்ளி முழுவதும் தூய்மைப் படுத்தி கிருமிநாசினி தெளித்தனர். இதனால் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கம்போல் பள்ளி வகுப்புகள் நடக்கும் என்று கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் கொரோனோ பரவல்அச்சம் காரணமாக பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.இதனால் மாணவர்கள் வருகை குறைவாக இருந்ததால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!