பாலக்கோடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

பாலக்கோடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

பைல் படம்.

பாலக்கோடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழக அரசு தமிழகம் ழுழுவதும் கொரோனா தடுப்பூசி மாபெரும் மருத்துவ முகாம் நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து சார்பில் 18 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், தக்காளி மார்க்கெட், மைதீன்நகர், அக்ராகரம், ஜூ.கே.ஆஸ்பிட்டல், அரசு மகப் பேறு மருத்துவமனை ஆகிய 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காலை 8 மணி முதலே 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பாலக்கோட்டில் இன்று மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதில், 4 வது வார்டு பாபு சாகிப் தெருவில் நடைப்பெற்ற முகாமில் அதிகபட்சமாக 300க்குப் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் டார்த்தி சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture