பாலகோட்டில் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

பாலகோட்டில் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
X

விளையாட்டு பேட்டிகளில் வெற்றிபெற்ற பாலக்கோடு  எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர், மாணவிக்கு கல்லூரி முதல்வர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். 

பாலகோட்டில் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பாரத ரத்னா புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் தமிழரசன் (மூன்றாம் ஆண்டு கணிணி அறிவியல்) பெரியார் பல்கலைக அளவிலான தேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து அகில இந்திய பல்கலைகழக போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மாணவி கிருத்திகா (முதலாம் ஆண்டு இயற்பியல்) ஹாக்கி போட்டியில் பெரியார் பல்கலை கழக அனிக்கு தேர்வு பெற்று தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் செண்பக லஷ்மி, கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்பாபு ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!