ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி பயிற்சி அணிக்கு பாலக்கோடு கல்லூரி மாணவர் தேர்வு

பாலக்கோட்டை சேர்ந்த கல்லூரி மாணவர், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி பயிற்சி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் செல்வராஜ், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், வரும் 2024.ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஹாக்கி ஆண்கள் அணியில் பங்கேற்று விளையாடுவதற்கான பயிற்சி முகாமிற்கு தேர்வு பெற்றுள்ளார்.

இதற்கான பயிற்சி, மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கபட உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி பயிற்சி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வராஜிக்கு கல்வித்துறை சார்பில், தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!