காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
X

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு‌ செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி,நேரில் பார்வையிட்டு ஆய்வு‌ செய்தார்.

பெரியாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரங்கள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து பெரியாம்பட்டி சுகாதார பூங்கா முறையாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பெரியாம்பட்டி, இண்டமங்கலம், கோவிலூர், பைசு அள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் சாலை அமைத்தல், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, கிருஷ்ணன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!