தேர்தல் தொடர்பான புகார்கள் தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்க கலெக்டர் தகவல்

தேர்தல் தொடர்பான புகார்கள் தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்க கலெக்டர் தகவல்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி.

தேர்தல் தொடர்பான புகார்கள் தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலாளர், சென்னை, டி.என்.ஹரிஹரன், தேர்தல் பார்வையாளராக (Election Observer) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர் (Election Observer) சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள அரசு கூடுதல் சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்கிறார். எனவே ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளரை அவரது முகாம் அலுவலகமான சேலம் கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண்.1 -ல் பிற்பகல் 2மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நேரிலும், 9487935429 கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai powered agriculture