பாலக்கோட்டில் ஐயப்ப சுவாமி 49ம் ஆண்டு மண்டல பூஜை: பக்தர்கள் தரிசனம்

பாலக்கோட்டில் ஐயப்ப சுவாமி 49ம் ஆண்டு மண்டல பூஜை: பக்தர்கள் தரிசனம்
X

பாலக்கோட்டில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி 49ம் ஆண்டு மண்டல பூஜை, சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி 49ம் ஆண்டு மண்டல பூஜை, சுவாமி திருவீதிஉலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி 49ம் ஆண்டு மண்டல பூஜை, சுவாமி திருவீதிஉலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை ஆத்துப்பிள்ளையார் கோவிலில் கங்கா பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது, அதனை தொடர்ந்து முதன்முதலாக சபரிமலைக்கு மாலை போட்டு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்றும் சொல்லப்படும் கன்னி பூஜை ஐயப்ப குருமார்கள் நடத்தி வைத்தனர்.

ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் பந்தல் அமைத்து அதன் நடுவில் ஐயப்பன் படம் வைத்து சுற்றிலும் கணபதி, மாளிகை புறத்தம்மன், கருப்பசுவாமி, கடுத்தை சுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றுக்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்றி பஜனை பாடி பூஜை செய்து எல்லா தெய்வங்களுக்கும் அவல் பொரி, பாக்கு, கலவை சாதம் படைத்து வழிப்பட்டனர். பூஜை நிறைவுற்றதை தொடர்ந்து மாலை 5மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி வீதி உலா ஶ்ரீவேனுகோபால் சுவாமி கோவிலில் துவங்கி காவல்நிலையம், ஸ்துபிமைதானம், பஸ்நிலையம், திரொபதியம்மன்கோவில், தக்காளி மார்கெட் வரை மேள தாளங்கள் முழங்க சாமி ராஜ வீதி உல நடைபெற்றது.

இதில் ஐயப்ப சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்ப பத்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil