தர்மபுரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது: கலெக்டர் வழங்கி கவுரவிப்பு

தர்மபுரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது: கலெக்டர் வழங்கி கவுரவிப்பு
X

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கலெக்டர் வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தலைமையேற்று விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 9 ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கான பாராட்டுச்சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், மற்றும் ரூ.10,000 ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கினார்.

அறியாமை என்ற இருளை நீக்கி அறிவுக் கண்ணைத் திறந்திடும் மகத்தான பணியினை ஆற்றிவரும் ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுற்கு தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், 4 தொடக்க/நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒரு மெட்ரிக்பள்ளி ஆசிரியர் என மொத்தம் 9 ஆசிரியர்கள் மாநில தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர், வ. செந்தில்செல்வம் , பாலவாடி, அரசு உயர்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், இரா. சிவமூர்த்தி பொம்மஅள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியை, அ.சர்மிளா பேகம் தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர், ம.வெ. வாசுதேவன்,அருர் ஒன்றியம், இராயப்பன் கொட்டாய், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமையாசிரியர் கு.முருகன் , காரிமங்கலம் ஒன்றியம், குண்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தலைமையாசிரியர் கு.சரவணன், பென்னாகரம் ஒன்றியம், கோடி அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தலைமையாசிரியர் இரா சுப்பிரமணியன் , தர்மபுரி ஒன்றியம், அதகபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமையாசிரியை கோ.அமுதா,தர்மபுரி செந்தில் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சு.கவிதா அவர்களுக்கும் என தர்மபுரி மாவட்டத்தில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 9 ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கான பாராட்டுச்சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், மற்றும் ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கபட்டது.

இவ்விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருமதி. வே.ஹேமலதா, மாவட்டக்கல்வி அலுவலர்கள் தர்மபுரி இரா.பாலசுப்பிரமணி, அரூர் மு.பொன்முடி, பாலக்கோடு தி.சண்முகவேல் உட்பட் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு